தென்ஆப்ரிக்க ஆலையில் விரைவில் டிரக் உற்பத்தி: டாடா

டிரக் உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ், வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கனவே, தாய்லாந்து மற்றும் வங்கதேசத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிரக் அசெம்பிளிங் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நிலையில், ஆப்ரிக்க சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளை டாடா மேற்கொண்டுள்ளது. தற்போது ஆப்ரிக்காவிற்கு வர்த்தக பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகு ரக மற்றும் நடுத்தர டிரக்குகளை டாடா ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு வர்த்தகத்தை விரிவாக்குவதற்கு ஏதுவாக, தென் ஆப்ரிக்காவில் உள்ள அசெம்பிளிங் தொழிற்சாலை ஒன்றை ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து டாடா கையகப்படுத்தியுள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்னும் சில நாட்களில் டிரக்குகளை அசெம்பிளிங் செய்யும் பணி துவங்கப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தென்ஆப்ரிக்காவில் ஏற்கனவே பஸ் பாடி கட்டும் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








