சிறு நகரங்களில் நானோவுக்கும் பிரத்யேக ஷோரூம்:டாடா திட்டம்

நானோ காரின் விற்பனை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நானோவுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கிய டாடா, பிக்பஜார் மற்றும் வெஸ்ட் சைடு அங்காடிகள் மூலம் நானோவை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால், நானோ விற்பனை தற்போது உயர்ந்து வருகிறது. இந்நிலையில், விற்பனையை மேலும் அதிகரிக்கும் வகையில் நானோவுக்கு தனி ஷோரூம்கள் திறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஏஸ் மினிடிரக்கை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தவிர, தனி ஷோரூம்கள் மூலமும் டாடா விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, நானோவுக்கும் சிறு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் தனி ஷோரூம்களை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால், எத்தனை ஷோரூம்கள் அமைக்கப்படும் என்பது குறித்து டாடா எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஏஸ் டிரக் தற்போது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தவிர, 600 தனி ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதே அளவுக்கு நானோவுக்கும் தனி ஷோரூம்கள் திறக்கப்படும் என தெரிகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








