விங்கர், சுமோவை ஒரே டீலரில் விற்க டாடா முடிவு

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ், வர்த்தக பயணிகள் வாகனங்களுக்கும், கார்களுக்கும் தனித்தனியாக டீலர்களை நியமித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், மாஜிக், விங்கர் உள்ளிட்ட வர்த்தக பயணிகள் வாகனங்களையும், நானோ, சுமோ உள்ளிட்ட கார்களையும் ஒரே டீலர்களில் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, சிறு நகரங்களில் உள்ள டீலர்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள டாடா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதன்மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேவை கிடைக்காத பகுதிகளில் வர்த்தகத்தை எளிதாக விரிவுப்படுத்த முடியும் என அந்த நிறுவனம் ஆணித்தரமாக நம்புகிறது
கார்களை விற்பனை செய்ய நாடு முழுவதும் 254 டீலர்களும், 600 விற்பனை மையங்களும் டாடா மோட்டார்சுக்கு உள்ளது.
இதேபோன்று, வர்த்தக பயணிகள் வாகனங்களை விற்பனை செய்ய 200 டீலர்களையும் 1000 விற்பனை மையங்களையும் அந்த நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications