மூன்றாவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 2.46%உயர்வு

By
Tata Motors
டெல்லி: கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,நிகர லாபம் 2.46சதவீதம் உயர்ந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ்,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்)வரவு செலவு அறிக்கையை நேற்று வெளியிட்டது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த ஆண்டு டிசம்பர் மாத்துடன் முடிந்த,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ410கோடி கிடைத்துள்ளது.இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் (ரூ.400.14கோடி)ஒப்பிடும்போது 2.46 சதவீதம் உயர்ந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,1,94,085 வாகனங்கள் விற்பனையாதன் மூலம் ரூ.11,458.95 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,65,413 விற்பனை செய்யப்பட்டு ரூ.8,923.99 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டின் இந்த மூன்றாவது காலாண்டில் மூலப்பொருட்களுக்கு ரூ.6,498.97 கோடியும்,கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,975.29 கோடியும் செலவிடப்பட்டது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 13, 2011, 11:15 [IST]
English summary
Tata Motors reported a 2.46 per cent increase in its net profit for the third quarter ended December, 31 2010 at Rs 410 crore.The company had posted a net profit of Rs 400.14 crore in the same period last fiscal, it said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+