டீசல், அல்லது சிஎன்ஜியுடன் பேட்டரியில் ஓடும் புதிய டாடா ஹைபிரிட் பஸ்

மும்பையில், சர்வதேச அளவிலான பஸ் கண்காட்சி சமீபத்தில் நடந்தது. இதில், ஸ்பெயினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனமான டாடா ஹிஸ்பானோ நிறுவனம் புதிய ஹைபிரிட் பஸ்சை காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த பஸ் டீசல்- எலக்ட்ரிக் அல்லது சிஎன்ஜி-எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த பஸ் கண்காட்சிக்கு வைத்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மூன்று எரிபொருளில் ஓடும் என்பதால் கண்காட்சிக்கு வந்திருந்த ஆட்டோமொபைல் நிபுணர்கள் இதனை சூப்பர் ஹைபிரிட் பஸ் என்று அழைத்தனர்.
டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் இதே போன்ற ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட பஸ்களுக்கு ஏற்கனவே மேட்ரிட்டை சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே 10 பஸ்களை ஆர்டர் செய்திருப்பது நினைவு கூறத்தக்கது.
மேலும், குறைந்த தூரத்திற்கு இயக்கும்போது முற்றிலும் பேட்டரியிலேயே இந்த பஸ்சை இயக்கலாம். இதனால், இந்த பஸ் துளிகூட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








