புதிய அம்சங்களுடன் டாடாவின் மான்சா எலன் அறிமுகம்

கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்,முன்னணி வகிக்கிறது.சந்தையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தகுந்த விலையில் நிறைவான அம்சங்கள் நிறைந்த கார்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
செடான் ரகத்தில் டாடாவின் மான்சா மாடல் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்ற காராக விளங்குகிறது.இதில்,மேம்படுத்தப்பட்ட மான்சா எலன் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது
மான்சா எலன் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் மான்சா எலன் கிடைக்கும்.சபையர் பெட்ரோல் எஞ்சின் மாடல் தோராயமாக ரூ.5.14லட்சம் விலையிலும்,குவாட்ரோஜெட் டீசல் எஞ்சின் மாடல் ரூ.5.91 லட்சம் விலையிலும் கிடைக்கும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள 90பிஎஸ் திறன் கொண்ட எஞ்சின் அதிக பிக்கப்பை தரும்.இதற்கு தக்கவாறு பாதுகாப்பும் அம்சங்களிலும்,மற்ற கார்களை மான்சா எலன் விஞ்சி நிற்கும். மழைக்காலங்களில் துரு பிடிக்காதவாறு கீழ்பாகத்தில் குரோமிய பூச்சுடன் கூடிய தகடு பொருத்தப்பட்டுள்ளது.
டபுள்டோன் அலாய்வீல்,பனிக்காலங்களில் ஓட்டுவதற்கு வசதியாக ஃபாக் லேம்ப்புகள் என இதன் ஒவ்வொரு அம்சத்தையும் விவரித்துக்கொண்டே செல்லலாம்.மான்சா எலன் பளபளக்கும் டைரியன் ஒயின் கலரிலும் கிடைக்கும்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








