டீசல் நானோ லிட்டருக்கு 30 கிமீ செல்வதாக பரபரப்பு தகவல்

Tata Nano
டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வரும் டீசல் நானோ கார் லிட்டருக்கு 30 கிமீ முதல் அதிகபட்சம் 34 கிமீ வரை செல்வதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக மைலேஜ் கொடுக்கும் விதத்தில் டீசல் நானோ காரை வடிவமைக்கும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் போஸ்ச் ஒத்துழைப்புடன் நானோ காருக்கான எஞ்சினை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருகிறது.

தற்போது பெட்ரோல் விலை எகிறி வருவதால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று டீசல் கார்களையே வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக நானோ வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மார்க்கெட்டில் டீசல் நானோ புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், சோதனை ஓட்ட நிலைகளில் டீசல் நானோ கார் லிட்டருக்கு 30 கிமீ முதல் 34 கிமீ மைலேஜ் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த காருக்கு ஏஆர்ஏஐ லிட்டருக்க 30 கிமீ செல்லும் கார் என்று சான்று அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் நானோ கார் லிட்டருக்கு 30 கிமீ செல்வது உறுதியானால் தற்போது நாட்டின் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக விளங்கும் டாடா இண்டிகா இவி2 காரை நானோ டீசல் விஞ்சும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2011, 9:46 [IST]
English summary
The Tata Nano which is India and the world's cheapest car is now available with a 650cc petrol engine. We had earlier reported that Bosch, the auto parts maker was developing the diesel power train for the Nano. A diesel powered Nano will be a dream car for several Indians as it will be a cheaper car to buy. Further diesel's improved fuel economy will also help. The Tata Nano diesel's fuel economy will be the best selling point for Tata Motors. According to sources, the mileage of the diesel Nano will be more than 30kmpl.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+