அதிக விலையால் வங்கதேசத்தில் நானோ அறிமுகம் ஒத்திவைப்பு

உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை நானோ கார் இந்தியாவில் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனையாகததால், நானோ காரை வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ அடுத்து நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் நானோ கார் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளால் விதிக்கப்படும் எகிடுதகிடான இறக்குமதி விலையால், இந்தியாவைவிட 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் விலையில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நானோ காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடந்த சனிக்கிழமை டாக்காவில் நடந்த கண்காட்சி ஒன்றில் நானோ காரை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கண்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்கள் விலை அதிகமாக இருப்பதாக கூறியதால், வர்த்தக ரீதியில் நானோவின் அறிமுகத்தை அந்நாட்டு மொத்த விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதோல் மோட்டார்ஸ் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து நிதோல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் மத்லுப் அகமது கூறியதாவது:
"நானோ கார் குறித்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விபரங்களை ஆர்வமுடன் கேட்டனர். மேலும், 23 பேர் காரை புக்கிங் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், விலை அதிகமாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்ததால், காரின் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
எனவே, நானோ காரின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளோம்," என்றார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வங்கதேச அரசு 132 சதவீத வரி விதிக்கிறது. இதனால், இந்தியாவை விட நானோ காரின் விலை அங்கு 2 மடங்கு வரை கூடுதலாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ரூ.3.80 லட்சம் என்ற விலையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முகம் சுளித்ததால், அந்த காரின் அறிமுகம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை நானோ கார் இந்தியாவில் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனையாகததால், நானோ காரை வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ அடுத்து நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் நானோ கார் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளால் விதிக்கப்படும் எகிடுதகிடான இறக்குமதி விலையால், இந்தியாவைவிட 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் விலையில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நானோ காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடந்த சனிக்கிழமை டாக்காவில் நடந்த கண்காட்சி ஒன்றில் நானோ காரை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கண்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்கள் விலை அதிகமாக இருப்பதாக கூறியதால், வர்த்தக ரீதியில் நானோவின் அறிமுகத்தை அந்நாட்டு மொத்த விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதோல் மோட்டார்ஸ் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து நிதோல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் மத்லுப் அகமது கூறியதாவது:
"நானோ கார் குறித்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விபரங்களை ஆர்வமுடன் கேட்டனர். மேலும், 23 பேர் காரை புக்கிங் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், விலை அதிகமாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்ததால், காரின் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
எனவே, நானோ காரின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளோம்," என்றார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வங்கதேச அரசு 132 சதவீத வரி விதிக்கிறது. இதனால், இந்தியாவை விட நானோ காரின் விலை அங்கு 2 மடங்கு வரை கூடுதலாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click it and Unblock the Notifications