சலுகைகள், விளம்பரங்களின் புண்ணியத்தால் நானோ விற்பனை உயர்வு

TATA Nano
டெல்லி: சலுகைகள் மற்றும் டிவி விளம்பரங்களால் நானோ கார் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 8,707 நானோ கார்கள் விற்பனையானதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

திடீர் விலையேற்றம், தீப்பற்றி எரிந்தது உள்ளிட்ட காரணங்களால் நானோ காரின் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றது. மாதத்திற்கு வெறும் 500 நானோ மட்டுமே விற்பனை என்ற நிலைக்கு நானோ தள்ளப்பட்டதால் டாடா விழிபிதுங்கியது.

நானோவின் விற்பனையை தூக்கி நிறுத்த படாதபாடுபடுகிறது டாடா மோட்டார்ஸ். நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட சலுகைகள் மற்றும் டிவி விளம்பரங்களால் நானோவி்ன் விற்பனை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 8,262 நானோ கார்கள் விற்பனையானது. இந்நிலையில், மார்ச் மாதம் 8,707 நானோ கார்கள் விற்பனையானதால், டாடா சற்று நிம்மதியடைந்துள்ளது. நானோவின் விற்பனையை வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பல்வேறு முயற்சிகளை டாடா மோட்டார்ஸ எடுத்து வருகிறது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கடந்த மார்ச் மாதம் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை சேர்த்து 83,363 வாகனங்களை விற்பனை செய்தோம். இதில், 8,707 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டது.

விரைவில் நானோ டீசல் மாடல் வரவுள்ளது. டீசல் நானோ வந்தவுடன் மாத்திற்கு 10,000 நானோ கார்கள் என்ற எண்ணிக்கையை தொட்டுவிடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 5, 2011, 9:54 [IST]
English summary
Tata Motors must be elated over the abrupt surge in the sales of its wonder car Tata Nano. The petite car was being questioned for its security features, specially when a Tata Nano caught fire in Ahmadabad recently. But surpassing that bad phase, Tata Nano has shun away its critics and come out as a winner. Tata Nano which at one point had witnessed sales of meagre 500 cars has touched the mark of 8707 units in the month of March.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+