டாடா முயற்சிகளுக்கு பலன்: நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரிப்பு

Tata Nano
நானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரித்துள்ளது.

உலகின் குறைந்த விலை காராக இன்று வரை பெயரை தக்கவைத்து வரும் நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரியத் துவங்கியது. இதனால், நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகை திட்டங்களையும்,விளம்பர பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.

இதனால், நானோ கார் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் செல்ல துவங்கியுள்ளது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,401 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையுடன்(509 கார்கள்) ஒப்பிடும்போது 12 மடங்கு உயர்ந்துள்ளது.

இது 12 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நானோ விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கிடைத்த பலனாகவே இது கருதப்படுகிறது.

இதேபோன்று, இண்டிகா வரிசை கார்களின் விற்பனையும் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 5,716 இண்டிகா வரிசை கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 10,926 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 91.15 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 2, 2011, 10:28 [IST]
English summary
Tata Motors small car Nano’s sales posted at 6,401 units in November, compared to 509 units in the same month in last year. The Indica series sales stood at 10,926 units against 5,716 units in the year-ago period, This is up 91.15 per cent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+