மைக்ரோ-ஹைபிரிட் நானோ காரை அறிமுகப்படு்த்த டாடா திட்டம்?

லிட்டருக்கு 40 கி.மீ. செல்லும் நானோ டீசலை அறிமுகப்படுத்துவதற்கான முனைப்பில் இருக்கும் டாடா அடுத்து, மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலையும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சிக்னல்களில் கார் நிற்கும்போதோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் தேவையில்லாமல் கார் ஓர் இடத்தில் நிற்கும்போதும் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பம் கார் எஞ்சினை தானாகவே அணைத்துவிடும். பின்னர் ஆக்சிலேட்டரை லேசாக அழுத்தினால்போதும், எஞ்சின் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.
இந்த தொழில்நுட்பம் மூலம் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். இந்த தொழில்நுட்பத்தை ஸ்கார்ப்பியோ காரில் புகுத்தியுள்ளது மஹி்ந்திரா. இதைத்தொடர்ந்து, இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை நானோவில் புகுத்தி அறிமுகம் செய்ய டாடா பரிசீலித்து வருகிறது.
நானோவுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் போஸ்ச் மற்றும் கான்டினென்டல் நிறுவனங்களிடமிருந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை பெற டாடா திட்டமி்டடுள்ளதாக தெரிகிறது. சாதாரண மாடலைவிட மைக்ரோ-ஹைபிரிட் நானோ மாடல் 15 முதல் 20 சதவீதம் வரை விலை கூடுதலாக இருக்கும் என யூக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








