இருப்பை குறைக்க மான்ஸாவுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் டாடா

ஆண்டு கடைசி நெருங்கியுள்ளதால் கார் விற்பனையில் சரிவு காணப்படுகிறது. கார் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மான்ஸா செடான் காருக்கு டாடா மோட்டார்ஸ் தள்ளுபடி பணச் சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்த சலுகையின்படி, மான்ஸா பெட்ரோல் மாடலின் அக்வா பேஸ் வேரியண்ட் ரூ.4,99,053 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விலையை விட ரூ.32,000 குறைவாகும்.
இதேபோன்று, டீடல் மாடல் மான்ஸாவுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.6,07,130 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டீசல் மாடல் மான்ஸா பேஸ் வேரியண்ட் ரூ.5,73,130 விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.34,000 தள்ளுபடி சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
டீசல் மாடலில் ஆரா மற்றும் எலான் வேரியண்ட்களுக்கும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது ரூ.6,91,505 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆரா டீசல் வேரியண்ட் சலுகை அடிப்படையில் ரூ.6,57,505க்கு கிடைக்கும்.
இதேபோன்று, ரூ.7,53,191க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மான்ஸா எலான் டாப் வேரியண்ட் சலுகை அடிப்படையில் ரூ.7,19,191க்கு விற்பனை செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








