ஐரோப்பிய சந்தைக்கான ஸ்பெஷல் நானோ காரை அறிமுகம் செய்யும் டாடா

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார், பாதுகாப்பு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், நானோவின் விற்பனையை பெருக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டது. நானோவின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஐரோப்பிய ச்நதைக்கு ஏற்ற தரத்தி்ல் இல்லை.
இதையடுத்து,அமெரி்க்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்ற வகையில், நானோவின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு, பிக்செல் என்ற புதிய சிறிய ரக காரை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. பிக்செல் காரின் கான்செப்ட் மாடல் ஜெனிவாவில் நடைபெறும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேல்புறம் கதவுகள் திறக்கும் வகையில் ஹை லுக்குடனும், உட்புறம் அதிக இடவசதியுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தரத்தில் நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் பிக்செல் காரை விரைவில் அறிமுகம் செய்வதற்காக, தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பிக்செல்லின் வடிவமைப்பு மற்றும் அறிமுகம் செய்வது குறித்து டாடா மோட்டார்ஸ் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








