வரும் 27ந் தேதி புதிய டாடா சஃபாரி மெர்லின் அறிமுகம்?

சர்வதேச தரத்துடன் கூடிய கார் தயாரிப்புக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஐரோப்பிய சந்தைக்கேற்ற தரத்துடன் புதிய நானோ காரை டாடா வடிவமைத்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச சந்தைக்கான தரத்துடன் புதிய சஃபாரி எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சஃபாரி மெர்லின் என்று பெயரிடப்பட்டுள்ள எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டோ பார்ச்சூனர், ஹோண்டா சிஆர்வி போன்ற பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு ஒப்பான அம்சங்களுடன் இந்த புதிய சஃபாரி கார் வர இருக்கிறது. சஃபாரி காருக்கு மாற்றாக இல்லாமல் சஃபாரி மெர்லின் என்ற பெயரில் இந்த கார் புதிய பெயரில் அறிமுகமாக இருக்கிறது.
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் லேண்ட் ரோவர் கார்கள் போன்று தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கம்பீரமாக இருக்கிறது. இந்த எஸ்யூவி சஃபாரியில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.2 லிட்டர் டிகோர் எஞ்சினுடன் வர இருக்கிறது.
ஆர்யா எம்பிவி கார் போன்று சொகுசு அம்சங்களின் கோர்வையாகவும், இந்திய நிறுவனம் தயாரித்த முதல் பிரிமியம் எஸ்யூவி என்ற பெருமையுடன் வரும் இந்த புதிய எஸ்யூவியை வரும் 27ந் தேதி டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில்தான் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








