புதிய டாடா சஃபாரி கார்: விரைவில் டாடா அறிமுகப்படுத்துகிறது

எப்போதும் இல்லாத அளவிற்கு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிக்கொண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில், எஸ்யூவி மார்க்கெட்டில் தாக்குப்பிடிப்பதற்காக சஃபாரியை மேம்படுத்தி அறிமுகம் செய்கிறது டாடா மோட்டார்ஸ்.
மார்க்கெட்டில் நித்தம் ஒரு எஸ்யூவி கார் அறிமுகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், போட்டியை சமாளிக்கும் வகையிலான அம்சங்கள் நிறைந்த சஃபாரி மெர்லின் என்ற பெயரில் வருகிறது புதிய சஃபாரி. மேலும், டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிரிட்டனின் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் ஒத்துழைப்புடன் தற்போது புதுப்பிறவி எடுக்கிறது சஃபாரி.
புதிய சஃபாரி 2.2 லிட்டர் டிகோர் எஞ்சினுடன் வருகிறது. இது 140பிஎச்பி ஆற்றலை வெளிக்கொணரும் திறன் படைத்ததாக இருக்கும். தவிர, ஆரியாவில் இடம்பெற்றுள்ள பல புதிய தொழில்நுட்ப வசதிகளை புதிய சஃபாரி கொண்டிருக்கும்.
நாட்டின் மற்றொரு பெரிய நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் விரைவில் குளோபல் எஸ்யூவி காரை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. எனவே, அதற்கு முன்னதாகவே வரும் செப்டம்பரில் புதிய சஃபாரி மெர்லின் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








