டெல்லி ஆட்டோ ஷோவில் பிக்ஸெலை பார்வைக்கு வைக்கும் டாடா

Tata Pixel
நானோவின் அடுத்த தலைமுறை பிக்ஸெல் குட்டி காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய சந்தைக்காக டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய பிக்ஸெல் கார் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜெனிவா ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்து அனைவரையும் அசத்தியது டாடா மோட்டார்ஸ்.

நானோ காரின் பேஸ் மாடலில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் நானோவுக்கும் இதுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்று கூறும் அளவுக்கு பிக்ஸெல்லை வடிவமைத்திருந்தனர் டாடா எஞ்சினியர்கள்.

3 மீட்டர் நீளம் கொண்ட பிக்ஸெல் பக்கவாட்டில் மேலே தூக்கும் விங் டோர்கள், பெரும்பாலான பகுதி கண்ணாடியால் சூழப்பட்டு பளிங்கு மாளிகை போன்று டாடா உருவாக்கிய பிக்ஸெல் ஜெனிவா ஆட்டோ ஷோ வந்த பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது.

மேலம், ரியர் வீல் கவுண்டர் ஸ்டீயரிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை பிக்ஸெல் கொண்டிருப்பதால் வெறும் 2.6 மீட்டர் சுற்றளவுக்குள் திரும்பும் வசதி கொண்டது. பின்புற எஞ்சின் கொண்ட பிக்ஸெலில் 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தி விற்பனைக்கு கொண்ட வரப்பட உள்ளது.

இந்த நிலையில், தனது வடிவமைப்பு பராக்கிரமத்தை சொந்த நாட்டு வாடிக்கையாளர்களுக்கு காட்டும் வகையில், பிக்ஸெல் காரை விரைவில் துவங்க உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, நானோ டீசல் மற்றும் டாடா மான்ஸா செடான் காரின் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் மாடல் ஆகியவற்றையும் காட்சிக்கு வைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Article Published On: Wednesday, December 28, 2011, 10:14 [IST]
English summary
Tata motors to display of its European version small car Pixel in Delhi Auto Expo. The pixel was designed by Tata eingineers and nano base model. It will equipped with 3 cylinder petrol and turbo diesel engines.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+