மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டாடா சுமோ அறிமுகம்

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா சுமோவுக்கு நிரந்தர இடத்தை தக்க வைத்து வருகிறது. புதிது புதிதாக ஏராளமான எஸ்யூவி மாடல்கள் வந்தாலும் குறைந்த விலையில், குறை சொல்ல முடியாத வடிவமைப்புடன் வரும் சுமோவுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு நல்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் சுமோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாடு கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு கொண்ட சிஆர்-4 காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் புதிய சுமோ கோல்டு விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய சுமோ கோல்டு லிட்டருக்கு 14.7 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஜிஎக்ஸ், இஎக்ஸ், எல்எக்ஸ் மற்றும் சிஎக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்களில் புதிய சுமோ கோல்டு விற்பனைக்கு கிடைக்கும்.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய பொலிரோவுக்கும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள பிஎஸ்-4 செவர்லே தவேராவுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் புதிய சுமோவை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








