பிஎஸ்-4 அம்சத்துடன் புதிய இண்டிகா இ-ஸீட்டா: டாடா அறிமுகம்

Tata Indica E xeta
டெல்லி: பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட இண்டிகாவின் புதிய மாடலான இ-ஸீட்டா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

டாடாவின் பிரபல மாடலான இண்டிகா வி2 ஸீட்டா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலே இந்த இ-ஸீட்டா. வெளிப்புறம், உட்புறம் ஆகிய அனைத்திலும் இ- ஸீட்டா பல்வேறு மாற்றங்கள் கண்டுள்ளது.

முன்பக்க கிரில் புதிய வடிவமைப்பை பெற்று புதிய இண்டிகாவின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. புதிய அலாய் வீல்களுடன் வரும் இ-ஸீட்டா சாலையில் செல்கையில் ரதம் போன்று காட்சியளிக்கிறது.

மின்ட் வொயிட், ஆப்பிள் கிரின், ஆர்ட்டிக் சில்வர், நியோ ஆரஞ்ச் ஆகிய புதிய வண்ணங்களில் இண்டிகா இ-ஸீட்டா களமிறங்கியுள்ளது.

சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் இ-ஸீட்டா சிறப்பாக இருக்கிறது. முகப்பு மற்றும் பின்பக்கத்தில் பனிக்காலத்தில் செல்வதற்கான விளக்குகள்(ஃபாக் லேம்ப்), சென்ட்ரல் லாக்கிங், சைல்டு சேப்டி லாக் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

புளூடூத், பவர் விண்டோஸ், கொல்லாப்பிசிபிள் ஸ்டீயரிங், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட், கீலெஸ் என்ட்ரி என அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களுக்கும் இதில் குறைவில்லை.

புதிய கலர்கள், புதிய கதவு கைப்பிடிகள், பம்பர் ஆகியவை மாற்றம் கண்டுள்ளன. புதிய இண்டிகா இ-ஸீட்டா மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ற வகையில் பாரத் ஸ்டேஜ்-4 தரத்தை கொண்ட எஞ்சினுடன் வந்துள்ளது.

இந்த கார் பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இ-ஸீட்டாவுக்கு ரூ.2.97 லட்சம் முதல் ரூ.3.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 18, 2011, 12:06 [IST]
English summary
Tata Motors unveils of its popular hatchback Indica v2 xeta's new avatar named as Tata Indica e-Xeta.The major changes on the exterior include new body color door handles, bumper and a newly designed front grille and a new set of alloy wheels.The level of comfort, convenience and safety has been boosted with addition of the features such as front & Rear fog lamps, central locking, child safety lock, Bluetooth connectivity, power windows,tilt steering, USB and AUX ports, and a keyless entry.The new e-Xeta is available in the price range of Rs 2.97 lakh to Rs 3.65lakh (ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+