டாடா வென்சர்... ரூ 4.05 லட்சத்தில் 'மல்டி யுடிலிட்டி' கார்!

கிட்டத்தட்ட மாருதி ஆம்னியை நினைவுபடுத்தும் இந்த வேனின் விலை ரூ 4. 05 லட்சம்.
காராகவும் பயன்படுத்தலாம், சரக்கு ஏற்றவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் இந்த வண்டியை.
"இந்த வண்டியின் விசேஷம், அதில் செய்யப்பட்டுள்ள சொகுசான வசதிகள். இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான வேன் / கார் மாடல் என்றால் டாடாவின் வென்சர்-தான்" என்கிறார் டாடா மோட்டார்ஸ் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் எஸ் சக்ஸேனா.
இப்போதைக்கு ராஜஸ்தானில் அறிமுகமாகியுள்ள இந்தக் காரின் அடுத்த இலக்கு தென்னிந்தியாதானாம். மாருதி ஆம்னிக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அந்த நிறுவனம் ஈகோ மாடலை வைத்து முயற்சி செய்யும் நிலையில், டாடா மோட்டார்ஸ் ஆம்னியைப் போன்ற மாடலை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வண்டி, 5 சீட், 7 சீட் மற்றும் 8 சீட் பொருத்தப்பட்ட மாடல்களாக விலைக்குக் கிடைக்கிறது. 5 வண்ணங்கள், பவர் ஸ்டீயரிங், ரிவர்ஸ் பார்க்கிங் எய்ட், ஏர்கண்டிஷன் என பல வசதிகளுடன் கிடைக்கிறது. விலை ரூ . 4.05 லட்சம் முதல் ரூ 5.07 லட்சம் வரை.


Click it and Unblock the Notifications








