ஜெனிவா மோட்டார் ஷோவில் அசத்தப்போகும் டாடா கார்கள்

Tata Aria
டெல்லி: ஜெனிவாவில் நடைபெற உள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியில்,கார்களை காட்சிக்கு வைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சி வரும் மாரச் 3ந்தேதி துவங்க உள்ளது.இந்த மோட்டார் கண்காட்சி உலகின் மாபெரும் சர்வேதேச மோட்டார் கண்காட்சியாக கருதப்படுகிறது.

இந்த கண்காட்சியில் உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கும்.தவிர,ஏராளமான புதிய மாடல்களும் அறிமுகப்படுத்தப்படும்.

விரைவில் துவங்க உள்ள இந்த மாபெரும் மோட்டார் ஷோவில்,தனது பிரபல மாடல் கார்களை காட்சிக்கு வைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இண்டிகா விஸ்டா,மான்சா மற்றும் சமீபத்திய அறிமுகமான ஏரியா ஆகிய மாடல்களை ஜெனிவா கார் கண்காட்சியில் இடம்பெற செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் இடம்பெற செய்வதன் மூலம்,உலக அளவில் தனது மாடல்களை எளிதாக பிரபலப்படுத்த முடியும் என்று டாடா மோட்டார்ஸ் நம்புகிறது.எனவே,இந்திய சந்தையில் பிரபலமான கார்கள் நிச்சயம் ஜெனிவா மோட்டார்ஸ் ஷோவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று டாடா மோட்டார்ஸ் எதிர்பார்ப்புடன் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2011, 10:51 [IST]
English summary
Tata Motors will make its entry grand in the Geneva show by displaying its famous models, Tata Indica Vista, Tata Indigo Manza and the Tata Aria. The models will make the appearance in Geneva Motor Show 2011 in their top end variant. These variants will help the company in attracting the customer’s attention with their superior features and high performance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+