புதிய ஸ்விப்ட்டுக்கு சவால் விடும் டாடா இண்டிகா விஸ்டா

அந்த வரிசையில் சமீபத்தில் மாருதி நிறுவனம் புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகா விஸ்டா காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
டாடா மான்சா செடான் கார் முகப்பை அப்படியே அச்சு அசலாக கொண்டிருக்கிறது டாடாவின் புதிய விஸ்டா கார். இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு செடான் காரில் செல்வது போன்ற உணர்வை தரும் என்று டாடா அடித்து கூறுகிறது.
இந்த நிலையில், ஸ்விப்ட்டை விட இண்டிகா விஸ்டா அனைத்து விதத்திலும் சிறந்தது என்று டாடா மோட்டார்ஸ் விளம்பர பிரச்சாரம் செய்து வருகிறது.
இண்டிகா விஸ்டாவில் உள்ள கூடுதல் வசதிகளை ஸ்விப்ட் காருடன் ஒப்பிட்டு டாடா மோட்டார்ஸ் கொடுக்கும் ஒப்பீட்டு பார்வையை பார்க்கலாம்.
இரண்டு கார்களின் டீசல் மாடல்களிலும், 4 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் காமன் ரயில் டைரக்ட் இஞ்செக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கார்களும் 90 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் சமமான ஆற்றலை கொண்டுள்ளது.
டாடா இண்டிகா விஸ்டா கார் லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜையும், ஸ்விப்ட் கார் லிட்டருக்கு 22.9 மைலேஜையும் கொடுக்கின்றன. மைலேஜில் விஸ்டா சற்று பின்தங்குகிறது. ஆனால், அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களில் விஸ்டாவும் ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும்.
உள்பக்க வேலைப்பாடுகளில் ஸ்விப்ட்டைவிட கூடுதல் அம்சங்கள் விஸ்டாவில் இருக்கின்றன. டியூவல் டோன் டேஷ் போர்டு, கறுப்பு மற்றும் சஹாரா பியேஜ் இன்டிரியர்ஸ் மற்றும் குஷனுடன் டிரிம் செய்யப்பட்ட உள்பக்க கதவுகள், பேபிரிக் இன்சர்ட்ஸ் ஆகியவை விஸ்டாவில் உள்ளன. இவை ஸ்விப்டில் இல்லை.
யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ்-இன் கொண்ட இன்டகிரேட்டட் மியூசிக் சிஸ்டம், 5 மொபைல்போன்களுடன் இணைத்துக்கொள்ளும் வசதிகொண்ட புளூ 5 புளூடூத், ஸ்டீயரிக் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், ரியர் வைப்பர், உயரத்தை கூட்டிக்குறைக்கும் வசதிகொண்ட டிரைவர் இருக்கை உள்ளிட்ட விஸ்டா வசதிகள் ஸ்விப்ட்டில் இல்லை.
ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன்(இபிடி) மற்றும் ரியர் டெமிஸ்ட்டர் ஆகியவை விஸ்டாவில் ஸ்டான்டர்டு அம்சங்களாகவே வருகின்றன. ஆனால், ஸ்விப்டில் இவை தேர்ந்தெடுக்கும் மாடல்களில் மட்டுமே கிடைக்கும்.
விலையிலும் இரண்டு கார்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அடிப்படை மாடலான விஸ்டா எல்எஸ் ரூ.4,79,915 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே, புதிய ஸ்விப்ட்டின் அடிப்படை மாடலான எல்டிஐ ரூ.5,17,163 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று அந்த விளம்பரத்தில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications