ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மாருதி தொழிலாளர்களுக்கு சுஸுகி தலைவர் கண்டனம்

மானேசரிலுள்ள மாருதி நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை முற்றி வருகிறது. ஸ்ட்ரைக் 12வது நாளை கடந்து விட்ட நிலையில் இரு தரப்பும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு மாருதியின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் மாருதி நிறுவனத்தின் 30 வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் ஒஸாமு சுஸுகி,"ஆலைக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது.
அது ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








