ரூ.325 கோடி முதலீ்ட்டில் சென்னை எஞ்சின் ஆலை விரிவாக்கம்:ஃபோர்டு

Ford
சென்னை: ரூ.325 கோடி முதலீட்டில் சென்னையிலுள்ள எஞ்சின் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்திய கார் சந்தையில் வளர்ச்சி கண்டு வரும் நிறுவனங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிகோ காரின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் உற்சாகமடைந்துள்ள ஃபோர்டு, 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கார் விற்பனை அதிகரித்து வருவதாலும், புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாலும் சென்னையிலுள்ள எஞ்சின் ஆலையை விரிவுப்படுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.325 கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கேல் போனிஹாம் கூறியதாவது:

"ஆண்டுக்கு 2.50 லட்சம் எஞ்சின்களை தயாரிக்கும் திறன்கொண்ட சென்னை ஆலையை, ரூ.325 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 3.30 லட்சம் எஞ்சின் தயாரிக்கும் ஆலையாக விரிவுப்படுத்துகிறோம். இந்த ஆலையின் விரிவாக்கம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவுபெறும்.

விரிவுப்படுத்தப்படும் எஞ்சின் ஆலையில் 300 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆலையில் 5 வகை பெட்ரோல் எஞ்சின்களும், ஒரு டீசல் எஞ்சினும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் பெட்ரோல் எஞ்சின் தாய்லாந்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 18, 2011, 15:26 [IST]
English summary
Ford Motor Company, the American automobile giant will invest $72 million in its engine plant to increase the annual production capacity from the current 250,000 units to 330,000 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+