நவீன வசதிகளுடன் புதிய டீசல் புளூயன்ஸ்: ரினால்ட் அறிமுகம்

மஹிந்திரா கூட்டணியிலிருந்து விலகியுடன் தனது பிராண்டுக்கு பிரிமியம் அந்தஸ்தை பெற புளூயன்ஸ் பிரிமியம் செடானை ரினால்ட் களமிறக்கியது.
உயர்தட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றுள்ள புளூயன்ஸ் முதலில் பெட்ரோல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், டீடல் மாடலில் பிரிமியம் காருக்கு தகுதியான அம்சங்கள் எதுவும் இல்லாமல் பேஸ் வேரியண்ட்டில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர் மத்தியில் சிறிது அதிருப்தியும், ஏமாற்றமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட ரினால்ட் தற்போது ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் டாப் வேரியண்ட் டீசல் புளூயன்சை அறிமுகம் செய்துள்ளது ரினால்ட்.
இ-4 என்ற புதிய டாப் வேரியண்ட் புளூயன்சில் மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர், இருள் வந்தால் தானாக எரியும் ஹெட்லைட்டுகள், நெடுஞ்சாலையில் ஒரே சீரான வேகத்தில் செல்லும் குரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன.
ரியர் வியூ பார்க்கிங் சென்சார், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர் ஆகிய வசதிகள் இருக்கின்றன. பியேஜ் இன்டிரியர்ஸ், கிளைமேட் கன்ட்ரோல் ஏசியும் உண்டு.
தவிர, பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், புளூடூத், யுஎஸ்பி போர்ட் வசதிகொண்ட மியூசிக் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ட்ஸ்ட்ரி ஆகிய ஏராளமான புதுமைகளுடன் வந்துள்ளது புளூயன்ஸ் டீசல்.
பழைய இ2 பேஸ் வேரியண்ட் டீசல் புளூயன்சை விட டாப் வேரியண்ட் இ-4 புளூயன்ஸ் டீசல் ரூ.1.5 லட்சம் கூடுதல் விலையில் வந்துள்ளது. புதிய இ4 வேரியண்ட் ரூ.15.12 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








