எலக்ட்ரிக் கார் பேட்டரிக்காக கைகோர்க்கும் டொயோட்டோ, பிஎம்டபிள்யூ

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தொழி்ல்நுட்பத்தை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகளை தயாரிப்பதற்கு கார் உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் டொயோட்டோ மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் கைகோர்த்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவுக்கான செலவீனத்தை குறைக்கும் வகையில் இரு நிறுவனங்களும் ஏற்கனவே தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டெய்ம்லர், ரினால்ட் மற்றும் நிசான் ஆகிய போட்டி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் குறைந்த எடையில் அதிக ஆற்றல் வாய்ந்த லித்தியான் அயான் பேட்டரியை தயாரிக்க இரு நிறுவனங்களும் கைகோர்த்து உள்ளதாக மார்க்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








