எட்டியோஸ், லிவா கார்கள் விற்பனை அதிகரிப்பு: டொயோட்டோ மகிழ்ச்சி

இந்திய மார்க்கெட்டில் சிறிய கார்கள் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும் என்று உணர்ந்து டொயோட்டோ அறிமுகப்படுத்திய லிவா மற்றும் எட்டியோஸ் கார்களின் விற்பனை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் டொயோட்டோ நிறுவனம் மொத்தமாக 13,956 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாத மொத்த கார் விற்பனையை(5,242 கார்கள்) ஒப்பிடும்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இதில், குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் விற்பனை. ஆம், கடந்த மாதம் டொயோட்டோ நிறுவனம் மொத்தம் 8,271 எட்டியோஸ் மற்றும் கார்களை விற்பனை செய்துள்ளது.

இதில், எட்டியோஸ் செடான் கார் கடந்த ஆண்டு டிசம்பரிலும், லிவா கார் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு புதிய கார் மாடல்களும் அந்த நிறுவனத்தின் கடந்த மாத மொத்த கார் விற்பனையில் இது 60 சதவீதம் அளவுக்கு பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டொயோட்டோ நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்,"கடந்த மாதம் கார் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி. வாடிக்கையாளர்கள் எங்களது பிராண்டு மீது வைத்துள்ள அதிக நம்பிக்கை பெருமிதம் கொள்ள செய்துள்ளது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 3, 2011, 12:16 [IST]
English summary
Japanese Car maker Toyota Motor posted an over two-fold rise in sales to 13,956 units in November, 2011. . The Etios series has sold a total number of 8,271 units in last month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+