டொயோட்டோ கோடைகால கார் சர்வீஸ் மேளா துவக்கம்: ஒரு மாதம் நடக்கிறது

இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாடிக்கையாளர்களுக்கு நிறைவான, தரமான சேவை அளிக்கும் விதத்தில் இந்த சர்வீஸ் முகாம் துவங்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள டொயோட்டோவின் 122 டீலர்களில் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கோடை விடுமுறையை கழிக்க வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் காரை சரிசெய்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சர்வீஸ் மேளா பயனுடையதாக இருக்கும்.
இந்த சர்வீஸ் மேளாவி்ல் டொயோட்டோவின் அனைத்து மாடல் கார்களுக்கும் 20 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் காருக்கு தேவையான குறிப்பிட்ட பரிசோதனையை மட்டும் தேர்வு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
சர்வீஸ் முகாமில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த சர்வீஸ் முகாமை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்," என்று டொயோட்டோ கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








