டொயோட்டோ கரொல்லாவை ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காராக வடிவமைக்கும் வித்தை

Ferrari F430 Replica
மும்பை: டொயோட்டோ கரொல்லா காரை, ஃபெராரி காராக மாற்றித்தருகிறது மும்பையை சேர்ந்த பிரபல வாகன மறுவடிவமைப்பு நிறுவனமான எக்ஸிக்யூட்டிவ் மோட்கார் டிரென்ட்ஸ் நிறுவனம்.

ஸ்போர்ட்ஸ் கார் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஃபெராரிதான். ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பாரம்பரியம் கொண்ட நிறுவனமாக திகழும் ஃபெராரியின் கார்கள் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்து வருகின்றன.

கட்டுறுதி, தரம் என அனைத்திலும் விஞ்சி நிற்கும் ஃபெராரி கார்கள், விலையிலும் சற்று அதிகம்தான். மார்க்கெட்டில் ஃபெராரி கார்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, பலருக்கு ஃபெராரி கார்கள் எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்நிலையில், ஃபெராரி கார்கள் மீது தீராத மோகம் கொண்ட வாடிக்கையாளர்களின் மனக்குறையை போக்கும் வகையில், டொயோட்டோ கரோல்லா காரை ஃபெராரி காராக மாற்றித் தருகிறது மும்பையை சேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் மோட்கார் டிரென்ட்ஸ் நிறுவனம்.

பஸ், கார் மறுவடிமைப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் டொயோட்டோ கரோல்லா காரின் மேல்புற பாகங்களை அகற்றிவிட்டு, பைபர் கிளாசில் ஆன ஃபெராரி கார் வடிவமைப்பை கொண்ட பாடியை பொருத்திவிடுகிறது. இந்த மறுவடிமைப்பு செய்யப்பட்ட காரி்ல் 1.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், திறனை வெளிப்படுத்துவதிலும் இந்த கார் சபாஷ் பெறுகிறது.

பார்ப்பதற்கு அச்சு அசலாக ஃபெராரி எப்-430 கார் போன்று தோற்றமளிக்கும் இந்த காரை மறுவடிமைப்பு செய்து தருவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என எக்ஸிக்யூட்டிங் மோட்கார் டிரென்ட்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 17, 2011, 13:21 [IST]
English summary
Indian car modifier Executive Modcar Trendz has modified a Toyota Corolla and the result is an exact replica of the greatly coveted Ferrari F430. This replica is powered by the corolla's 1.8 litre engine. The Corolla's metal body frame has been replaced by fibra glass.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+