புதிய விபத்து தடுப்பு சாதனங்களை வடிவமைக்கும் டொயோட்டோ

Car Crash
டோக்கியோ: இந்தியாவில் கார்களால் ஏற்படும் சாலை விபத்துக்களால் ஏராளமானவர்கள் உயரிழக்கின்றனர். இதனால், புதிய விபத்து தடுப்பு தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் முயற்சிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கார் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், உலக அளவில் கார் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் டொயோட்டோ நிறுவனமும், விபத்துக்களை தடுக்கும் புதிய தொழில்நுட்பங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் அந்த நிறுவனம் வடிவமைத்து வரும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை காட்சிக்கு கொண்டு வந்தது. இதில், கார் விபத்து தடுப்பு தொழில்நுட்பம் (கிராஷ் அவாய்டு சிஸ்டம்) நிச்சயம் எதிர்காலத்துக்கு தேவையான தொழில்நுட்பமாக இருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தில், கார்களில் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார்கள் மூலம் முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் நிலை ஏற்பட்டால், ஸ்டீயரிங் வீல் தானியங்கி முறையில் செயல்பட்டு எதிரே வரும் வாகனங்களுடன் மோதாமல் காரை திருப்பும்.

மேலும், தானியங்கி பிரேக் மூலம் காரை பாதுகாப்பாக நிறுத்திவிடும். இந்த தொழில்நுட்பம் மூலம் ஏராளமான கார் விபத்துக்களை தடுக்க முடியும் என டொயோட்டோ எஞ்சினியர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற, பாதுகாப்பு தொழில்நுட்பம் வால்வோ கார்களில் இருக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தையும் தாண்டி கார் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டால், காரின் பேனட் தானியங்கி முறையில் மேலே தூக்கி காரிலுள்ள பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் தொழில்நுட்பத்தையும் டொயோட்டோ உருவாக்கி வருகிறது.

மூன்றாவதாக, கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் புதிய சாதனத்தையும் அந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலம், டிரைவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும்.

இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கார்களில் அறிமுகம் செய்யப்படும்போது நிச்சயம் பெரும்பாலான விபத்துக்களை தடுக்க முடியும் என டொயோட்டோ எஞ்சினியர்கள் தெரிவித்தனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 27, 2011, 15:19 [IST]
English summary
Toyota, the Japanese auto major has also made new inventions to improve the safety of vehicle users. Toyota has now developed a crash avoidance system that is some what similar to the one developed by Volvo.One of the highlights of Toyota's crash avoidance system is that once the system detects a possibility of a collision it takes control of the steering wheel to avoid a crash rather than stopping the car. Toyota is also said to have developed a system that will pop the bonnet up in case of a crash. Another innovative safety technology being developed by Toyota is a device inn the steering wheel that will measure the heart rate of the driver and avoid a crash when the driver suffers a heart attack.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+