எட்டியோஸ், லிவா கார்களை ஏற்றுமதி செய்யும் டொயோட்டோ

Toyota Etios
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலிருந்து எட்டியோஸ், லிவா கார்களை தென் ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டோ இந்தியாவில் தனது அடித்தளத்தை விரிவுபடுத்தி வருகிறது. தனது ஆலை விரிவாக்கப் பணிகளை தீவிரமாக செய்து வரும் அந்த நிறுவனம் இந்தியாவை மையமாக கொண்டு கார் ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பெங்களூரில் உள்ள தனது ஆலையிலிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு எட்டியோஸ் செடான் மற்றும் லிவா கார்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நகாவா கூறியதாவது:

"ஆண்டுக்கு 20,000 கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது எட்டியோஸ், லிவா கார்களுக்கு 70 சதவீதம் பாகங்களை உள்நாட்டிலேயே பெறுகிறோம்.

பெங்களூரில் கட்டப்பட்டு வரும் ட்ரான்மிஷன் ஆலையில் அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கவுள்ளது. அதன்பின், இந்த இரண்டு கார்களுக்கும் 90 பாகங்கள் உள்நாட்டிலிருந்து பெறும் சூழ்நிலை உருவாகும்,"என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2011, 9:57 [IST]
English summary
World second larget car manufacturer Toyota to export Etios and liva cars to South Africa by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+