இந்த ஆண்டில் 1,400 பேரை வேலைக்கு அமர்த்த டொயோட்டோ திட்டம்?

Toyoto
டோக்கியோ: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் இந்த ஆண்டில் புதிதாக 1,400 பேரை வேலைக்கு அமர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் வாகன தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. வாகன விற்பனை வளர்ச்சிக்கண்டு வருவதையடுத்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக 800 முதல் 900 பேரை டொயோட்டோ புதிதாக வேலைக்கு அமர்த்தி வருகிறது.

இந்நிலையில், டொயோட்டோவில் எஞ்சினியர்கள் பற்றாக்குறை காரணமாக, எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்பில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் கூடுதலாக எஞ்சினியர்களை பணிக்கு அமர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து வெளிவரும் பிரபல வர்த்தக நாளிதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு பன்மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதி்ல் தீவிரம் காட்டி வருகிறது.

எனவே,எலக்ட்ரிக் கார் உற்பத்தியை பெருக்கும் வகையில் இந்த ஆண்டு 1,400 எஞ்சினியர்களை பணியமர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், எலக்ட்ரிக் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக இந்த நடவடிக்கையை டொயோட்டோ மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 6, 2011, 15:44 [IST]
English summary
Toyota Motor Corporation plans to employ more engineers to its payroll by expanding recruitment for the first time in three years as competition intensifies in the development of green vehicles, the Japanese business daily reported.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+