மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டோ இன்னோவா- சிறப்பு தகவல்கள்

Innova New
வரும் ஜனவரி முதல் வாரம் துவங்கும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய இன்னோவாவை டொயோட்டோ அறிமுகப்படுத்துகிறது.

எம்பிவி மார்க்கெட்டில் தன்னிகரற்ற தலைவனாக இன்னோவா திகழ்கிறது. இந்திய எம்பிவி மார்க்கெட்டில் விற்பனையில் டொயோட்டோ இன்னோவா முன்னிலை வகிக்கிறது.

அதிக இடவசதி, அதிர்வுகள் இல்லாத சிறந்த சஸ்பென்ஷன், சிறந்த மைலேஜ் கொடுக்கும் எஞ்சின் உள்ளிட்ட பல ப்ளஸ் பாயிண்டுகளை கொண்டிருப்பதால் இந்திய வாடிக்கையாளர்களிடையே நன் மதிப்பை பெற்றுள்ளது இன்னோவா.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக ஏற்படும் சலிப்பை போக்கும் விதமாக சில கூடுதல் அம்சங்களுடன் இன்னோவாவை மேம்படுத்தியுள்ளது டொயோட்டோ.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இன்னோவாவை களமிறக்குகிறது டொயோட்டோ.

இந்த நிலையில், இன்னோவாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த சிறப்பு தகவல்களை இங்கே காணலாம்.

பழைய மாடலைவிட புதிய மாடலில் முன்பக்க கிரில் கூடுதல் கம்பீரத்தை கொடுகக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேனட்டில் கொடுக்கப்பட்டுள்ள கோடுகள் புதிய இன்னோவாவில் மாற்றங்கள் கண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

ஹெட்லைட்டுகளின் வடிவமைப்பும் எடுப்பாக தெரிவது கூடுதல் கவர்ச்சியை தருகிறது. பழைய மாடலைவிட முன்பக்க கிரில்லுக்கு கீழ் விசாலமான ஏர் டேமை கொண்டிருக்கிறது.

பனி விளக்குகளும் கச்சிதமாக பொருந்தியுள்ளது போன்று இருக்கிறது. ரியர் வியூ கண்ணாடியில் இன்டிகேட்டர் விளக்குகள் இருக்கின்றன.

அலாய் வீல்களும் சிற்சில மாற்றங்கள் கண்டுள்ளன. பழைய மாடல் போன்றே உட்புறத்தில் விசாலமான இடவசதியை புதிய மாடல் இன்னோவா கொண்டுள்ளது.

கேபினில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸ் வுட் பினிஷிங் மர வேலைப்பாடுகள் முன்பைவிட கூடுதல் அழகுடன் தெரிகிறது.

சென்ட்ரல் கன்சோலும் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும், அதுவும் ஃபாக்ஸ் சில்வர் பினிஷிங் செய்யப்பட்டுள்ளதால் கண்ணை கவர்கிறது.

விஎக்ஸ் டாப் வேரியண்ட் புதிய இன்னோவாவில் 6 இஞ்ச் அகலம் கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதில், ஆடியோ, டிவிடி மற்றும் புளூடூத் வசதிகள் இருக்கின்றன. இந்த வசதிகளை ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்கள் மூலம் இயக்க முடியும்.

ரிவர்ஸ் கேமராவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னோவாவில் புதிய வசதிகூட.

எஞ்சினை பொறுத்தவரை புதிய இன்னோவாவில் மாற்றங்கள் இல்லை. பழைய மாடலில் உள்ள அதே எஞ்சின் மாடல்களுடன் வருகிறது.

கையாளுமை மற்றும் பாதுகாப்பில் வழக்கம்போல் சபாஷ் என்று கூற வைக்கிறது புதிய இன்னோவா.

More from DriveSpark

Article Published On: Monday, December 19, 2011, 14:03 [IST]
English summary
Japanese car giant Toyota will be launched the facelifted Innova in Delhi Auto Expo. Here are given some features of 2012 model new Innova
மேலும்... #டொயோட்டோ #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+