புதிய லிவா, எட்டியோஸ் டீசல் மாடல்கள்: டொயோட்டோ அறிமுகம்

இந்திய சந்தைக்காக டொயோட்டோ நிறுவனம் வடிவமைத்து அறிமுகப்படுத்திய எட்டியோஸ் செடான் கார் மற்றும் சிறிய ரகத்தை சேர்ந்த லிவா ஹேட்ச்பேக் கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரண்டு கார்களின் டீசல் மாடல்களை டொயோட்டோ இன்று அறிமுகம் செய்துள்ளது. அதிக எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல 1.4 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் இந்த கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
டொயோட்டோவின் டி-4டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த காமன் ரயில் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.(இதே தொழில்நுட்பம்தான் இன்னோவா, பார்ச்சூனர் உள்ளிட்ட கார் எஞ்சின்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது). இந்த எஞ்சின் 68 பிஎஸ் பவரையும், அதிகபட்சம் 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த எஞ்சின் ஏஆர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 23.59 கிமீ செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டியோஸ் செடான் கார் ரூ.6.44 லட்சம் முதல் ரூ.7.87 லட்சம் விலையிலும், லிவா ரூ.5.54 லட்சம் ஆரம்ப விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








