மேம்படுத்தப்பட்ட கரொல்லா அல்டிஸ்: டொயோட்டோ அறிமுகம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் புதிய கரொல்லா அல்டிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் 1798 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய வடிவமைப்புடன் கூடிய ஹெட்லைட் மற்றும் கிரில் ஆகியவை கரொல்லாவுக்கு கூடுதல் பொலிவூட்டுகிறது.
டியூவல் டபிள்யூடி-ஐ தொழில்நுட்பத்துடன் வரும் புதிய கரொல்லா, ஏஆர்ஏஐ சான்றின்படி, பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 15.22 கி.மீ. மைலேஜும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.45 கி.மீ. மைலேஜும் கொடுப்பதாக தெரிவிக்கிறது
இதுகுறித்து டொயோட்டோ மேலாண் இயக்குனர் ஹிரோசி நாககாவா கூறுகையில்," கடந்த 2003ம் ஆண்டு கரொல்லோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 70,000 கார்களை விற்றுள்ளோம்.
வாடிக்கையாளர்களின் எதி்ர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கரொல்லா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது," என்றார்.
புதிய கரொல்லா பெட்ரோல் மாடல் ரூ.10.53 லட்சம் முதல் ரூ.14.77 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.11.46 லட்சம் முதல் ரூ.14.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








