விரைவில் எட்டியோஸ் லிவா அறிமுகம்: டொயோட்டோ

லிவாவை அறிமுகப்படுத்துவதில் டொயோட்டோ பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. இருப்பினும், வரும் 27ந் தேதி எப்படியும் லிவாவை இந்திய சந்தையில் லிவாவை டொயோட்டோ களமிறக்கிவிடும் என்று தெரிகிறது.
இதற்காக, லிவாவின் அனைத்து சாலை ஓட்ட சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது டொயோட்டோ.
மேலும், லிவாவை டெலிவிரி கொடுக்கும் விதமாக உற்பத்தியும் துவங்கப்பட்டுவிட்டதாக டொயோட்டோ வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.
முதலில் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் எஞ்சின் மாடலில் லிவா அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்பின்னர், வெகுவிரைவில் லிவாவின் டீசல் மாடலும் வரவுள்ளது.
இந்த புத்தம் புதிய மாடலை ரூ.4.1 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மார்க்கெட்டில் நுழைந்தவுடன், மாருதி ஸ்விப்ட், வோக்ஸ்வேகன் போலோ, நிசான் மைக்ரா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோர்டு பிகோ கார்களின் மார்க்கெட்டை லிவா உண்டு இல்லை என்று பண்ணிவிடும் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், டொயோட்டோவின் முதல் சிறிய கார் (ஹேட்ச்பேக் மாடல்) என்ற பெருமையுடன் இந்திய சந்தையில் லிவா களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








