இந்திய கார் மார்க்கெட்டில் 5 வது இடம்: டொயோட்டோ பெருமிதம்

Toyota Liva
எட்டியோஸ், லிவா கார்களின் புண்ணியத்தால் இந்திய கார் மார்க்கெட்டில் 5 வது இடத்தை டொயோட்டோ பிடித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம் கார் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்திய சந்தையிலும் டொயோட்டோ நன்கு வளர்ந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட எட்டியோஸ் செடான் கார் மற்றும் கடந்த ஜூனில் அறிமுகம் செய்யப்பட்ட லிவா ஹேட்ச்பேக் கார்கள் டொயோட்டோ விற்பனை வளர்ச்சியை வெகுவாக உயர்த்தியுள்ளன.

இதனால், இந்திய கார் மார்க்கெட்டில் தற்போது டொயோட்டோ 5 வது இடத்தில் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ தலைவர் ஹிரோஷி நககவா கூறுகையில்,"எட்டியோஸ் வரிசை கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இரண்டு கார்களும் பெங்களூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தேவை அதிகரித்து வருவதால் கார் உற்பத்தியை மும்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த இரண்டு புதிய கார் மாடல்களின் வரவால் தற்போது இந்திய கார் மார்க்கெட்டில் 5 வது இடத்தில் இருக்கிறோம்.

இது எங்களுக்கு மிகுந்த பெருமிதத்தை தருகிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 28, 2011, 16:21 [IST]
English summary
Toyota is now on the fifth position in the Indian car market it means sales. The company says, the all credit goes to Etios and Liva cars and both models receiving overwhelming responce from the Indian buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+