புதிய கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது டொயோட்டோ

Toyota Avanza
தோற்றம், சொகுசு என அனைத்திலும் கூடுதல் தகுதிகளுடன் கூடிய புதிய காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது டொயோட்டோ.

எம்பிவி கார் செக்மெண்டில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட இன்னோவா கார் டொயோட்டோவின் தொழில்நுட்பத்தை பரைசாற்றி வரும் மாடல்களில் ஒன்று.

அலுங்காமல் குலுங்காமல் செல்ல ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் சாய்ஸ் இன்னோவாதான்.

இந்த நிலையில், இன்னோவாவின் பிளாட்பார்மில் உருவாகப்பட்ட புதிய காரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது டொயோட்டோ.

அவன்ஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கார் சமீபத்தில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அவன்ஜாவை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

இன்னோவா பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டாலும், வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் மாற்றம் கண்டுள்ளது. அதிக மைலேஜ் மற்றும் கூடுதல் பிக்கப் தரும் வகையில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய இன்னோவா அவன்ஜா வருகிறது.

இந்த கார் ரூ.7 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா ஸைலோ, செவர்லே தவேரா மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிசான் என்வி-200 கார்களுக்கு இந்த புதிய இன்னோவா கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2011, 16:27 [IST]
English summary
The world's leading car manufacturer Toyota Motors is coming out with the all-new Multi Purpose Vehicle (MPV), the Toyota Avanza. The model is expected to roll-out around the end of this year. The responsibility of the introduction of the new MPV rests on the shoulders of Toyota Kirloskar Motors Limited (TKML), which is the Indian subsidiary of Toyota Motors. The Indian subsidiary is still celebrating the success it got after the launch of the Toyota Fortuner, Toyota Prius and the new Toyota Etios. These celebrated names are the biggest reason behind Toyota being at the top of the charts and holding all the aces, currently.Toyota Avanza is expected to cost around Rs. 7 lacs, which proves to be the right choice for buyers who need a perfect MUV with affordability factor being considered as a priority.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+