லிவா அறிமுகம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு:டொயோட்டோ அறிவிப்பு

Toyota Liva
டெல்லி: லிவா சிறிய கார் அறிமுகத்தை ஓராண்டுக்கு தள்ளிவைத்துள்ளதாக டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. உலக அளவில் சிறிய கார் விற்பனை கொடிகட்டி பறப்பதால், சிறிய கார் சந்தையில் நுழைய டொயோட்டோ விரும்பியது. இதற்காகஸ லிவா என்ற சிறிய காரை அறிமுகப்படுத்த இருப்பதாக டொயோட்டோ தயாரித்தது.

கடந்த மார்ச் மாதம் லிவாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக டொயோட்டோ அறிவித்ததால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை சீரழிவு உள்ளிட்ட காரணங்களால், லிவா அறிமுகம் தள்ளிப்போனது.

லிவா அறிமுகம் பற்றி பல்வேறு யூக செய்திகள் உலா வரத்துவங்கின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், லிவா மற்றும் எட்டியோஸ் சொகுசு காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டொயோட்டோ முறைப்படி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ துணை மேலாண் இயக்குனர் சந்தீப் சிங் கூறியதாவது:

"கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டியோஸ் செடான் காருக்கு எதிர்பார்த்ததைவிட அதிக ஆர்டர்கள் குவிந்துவிட்டன. எனவே, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் காத்திருப்பதை தவிர்க்க, எட்டியோஸ் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லிவாவை அறிமுகம் செய்தால், எட்டியோஸ் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, பெங்களுரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் சேர்த்து, ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யலாம்.

விரிவாக்கப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்தவுடன் இந்த தொழிற்சாலைகளிலும் ஆண்டுக்கு கூடுதலாக 60,000 கார்கள், அதாவது, 2.10 லட்சம் கார்கள் தயாரிக்க முடியும். எனவே, தொழிற்சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் லிவா மற்றும் எட்டியோஸ் சொகுசு காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 6, 2011, 12:30 [IST]
English summary
Toyota officially announced to postpone the launch of its luxury sedan Etios and small car Liva to next year due to the rising demands that has surpassed the company’s expectations. The brand will defer the launch in order to fulfill the expectations of customers and to focus towards increasing the overall production capacity.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+