தொழில்நுட்ப கோளாறு: கார், வேன்களை திரும்ப பெறுகிறது டொயோட்டோ

வாகன உற்பத்தியில் டொயோட்டோ நிறுவனம் உலக அளவில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு வாகன விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டொயோட்டோ, முதலிடத்தை பிடித்தது.
வாகன விற்பனையில் முன்னிலை வகித்தாலும்,டொயோட்டோ தயாரிப்புகளில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்சிலேட்டர் பெடல் பிரச்சினை காரணமாக லட்சக்கணக்கான கார்களை டொயோட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு திரும்ப பெற்றது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,கடந்த 2000ம் ஆண்டு மேமாதம் முதல் 2008ம் ஆண்டு அக்டோபர் வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்,வேன்களில் தவறான வடிவமைப்பு கொண்ட எரிபொருள் குழாய் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து,புதிய எரிபொருள் குழாய் பொருத்துவதற்காக,14 லட்சம் கார்களை திரும்ப பெற டொயோட்டோ முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட 12 லட்சம் நோயா மினிவேன்களும்,75,000 கிரவுன் மாடல்களும், 6,000 டவுனேஸ் வேன்களும் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 1.49 லட்சம் அவென்சிஸ் மாடல்களும் திரும்பபெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார், வேன்களை திரும்ப பெறுவதால் ஏற்படும் இழப்பு குறித்த விவரங்களை டொயோட்டோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் அந்நிறுவனத்தின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் வெகுவாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








