தொழில்நுட்ப கோளாறு: 5.5 லட்சம் கார்களுக்கு டொயோட்டோ ரீகால்

Toyota Recall
எஞ்சின் மற்றும் ஸ்டீயரிங் வீல் கோளாறு காரணமாக உலக அளவில் 5.5 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதில், அமெரிக்காவில் மட்டும் 4.20 லட்சம் கார்களை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது.

கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கேம்ரி கார்கள், ஹைலேண்டர், சியன்னா, சொலாரா, 2004ம் ஆண்டு மாடல் அவலோன், 2006ம் ஆண்டு மாடல் ஹைலேண்டர் எச்வி ஆகியவை திரும்ப பெறப்பட உள்ளன.

இதேபோன்று, லெக்சஸ் பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட 2004 மற்றும் 2005ம் ஆண்டு இஎஸ்330ஸ மற்றும் ஆர்எக்ஸ்330, 2006ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆர்எக்ஸ்400எச் ஆகிய கார்களுக்கு இந்த திரும்ப பெறும் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கார்களில் தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்து தருவதற்காக கார்களை திரும்ப பெறுவதற்காக வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் வாயிலாக முறைப்படி தகவல் அனுப்பப்படும் என டொயோட்டோ தெரிவித்துள்ளது.

இந்த திரும்பபெறும் அறிவிப்பில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் இடம்பெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 11, 2011, 13:25 [IST]
English summary
Japanese carmaker Toyota Motor Corp has announced yet another recall in the United states. The recall is now due to a faulty crankshaft pulley engine used in several Toyota and Lexus branded cars. Toyota has stated the recall will be effective about 5.5 lakh cars mostly in the US.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+