எரிபொருள் குழாயில் பிரச்னை: எட்டியோஸ், லிவாவுக்கு டொயோட்டோ ரீகால்

Toyota Liva
எரிபொருள் குழாயில் உள்ள பிரச்னை காரணமாக, 41,000 எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோ இந்திய சந்தையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய சந்தையின் தேவையை கருத்தில்க்கொண்டு, இந்தியாவுக்காக எட்டியோஸ் செடான் காரை கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, எட்டியோஸ் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட லிவா ஹேட்ச்பேக் காரையும் டொயோட்டோ கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த இரு கார்களும் விற்பனையில் டொயோட்டோவுக்கு முக்கிய இடத்தை பெற்று தந்துள்ளது.

மேலும், டொயோட்டோ பிராண்டு மதிப்பை இரு கார்களும் உயர்த்தியுள்ளன. இந்த நம்பிக்கையில் சிறிது பின்னடவை ஏற்படுத்தும் விதத்தில் எட்டியோஸ் மற்றும் லிவா கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

எஞ்சினுக்கு எரிபொருள் செல்லும் குழாயில் பிரச்னை இருப்பது குறித்து டீலர்கள் வாயிலாக டொயோட்டோவுக்கு புகார்கள் வந்துள்ளன. இதை உறுதி செய்துள்ள டொயோட்டோ சம்பந்தபட்ட கார்களில் பிரச்னையை சரி செய்து தருவதற்காக திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," இதுதொடர்பாக வாடிக்கையாளர்களை விரைவில் தொடர்பு கொள்ளப்படும். பிரச்னை உள்ள கார்களில் 45 நிமிடங்களில் ஹோஸ் குழாய் மாற்றித் தரப்படும். இதற்காக, சிறப்பு சர்வீஸ் முகாமை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டொயோட்டோ பல்வேறு நாடுகளில் அவ்வப்போது ரீகால் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது இந்தியாவில் முதன்முறையாக டொயோட்டோ ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 22, 2011, 13:44 [IST]
English summary
Toyota Kirloskar has announced the recall of several Etios And Etios Liva following an issue with a filler hose . The Japanese carmaker has stated there the problem could lead to some problems in the car and hence has decided to replace the filler hose immediately.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+