புதிதாக 1,500 பேருக்கு வேலை: டொயோட்டோ அறிவிப்பு

ஜப்பானிய ஆட்டோ ஜாம்பவான் டொயோட்டோ நிறுவனம் பெங்களூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. ஆசிய-பசிபிக் பகுதியில் டொயோட்டோவின் முக்கிய மார்க்கெட்டாக இந்தியா இருக்கிறது.
இந்த நிலையில், தனது இந்திய செயல்பாடுகளில் வேகம் காட்டி வருகிறது டொயோட்டோ. இந்திய சந்தைக்காக டொயோட்டோ தயாரித்து வரும் எட்டியோஸ் செடான் கார் மற்றும் லிவா ஹேட்ச்பேக் கார் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதையடுத்து, தனது உற்பத்தி திறனை அதிகரிக்க டொயோட்டோ முடிவு செய்துள்ளது. பெங்களூரில் உள்ள ஆலையில் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஏதுவாக புதிதாக 1,500 தொழிலாளர்களை நியமிக்க இருப்பதாக டொயோட்டோ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








