ஜப்பானில் உற்பத்தியைத் தொடங்கியது டொயோட்டா!

ஜப்பானை சமீபத்தில் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உற்பத்தியை முற்றாக நிறுத்தி வைத்திருந்தது டொயோட்டா தொழிற்சாலை.
மார்ச் 14 முதல் நிறுத்தப்பட்டிருந்த உற்பத்தியை மீண்டும் தொடங்கியது டொயோட்டா. ஆனால் வழக்கமான அளவாக இல்லாமல், 50 சதவீத அளவுக்கு மட்டும் இந்த உற்பத்தி இருக்கும் என டொயோட்டா அறிவித்துள்ளது.
அதேநேரம், வட அமெரிக்க தொழிற்சாலைகளில் தனது உற்பத்தியை பாதியாகக் குறைத்துக் கொள்வதாகவும் டொயோட்டா அறிவித்துள்ளது. உதிரிபாகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி இல்லாவிட்டாலும், அந்த நாட்களில் 25000 அமெரிக்க பணியாளர்களுக்கு வேலை தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








