உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுகளில் டொயோட்டோவுக்கு முதலிடம்

Toyota
லண்டன்: உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக, பிஎம்டபிள்யூ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி டொயோட்டோ முதலிடம் பெற்றுள்ளது.

உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டு குறித்து லண்டனை சேர்ந்த மில்வர்டு பிரவுன் என்ற நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்விற்காக உலகம் முழுவதும் 20 லட்சம் கார் வாடிக்கையாளர்களிடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த நிறுவனம் கருத்துக்களை கேட்டறிந்தது.

மேலும், கார் நிறுவனங்களின் நிதி ஆதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி ஆகியவையும் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டு சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டு வரிசையில் டொயோட்டோ முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி டொயோட்டோ இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. நான்காவது இடத்தில் ஹோண்டாவும், ஐந்தாவது இடத்தை போர்ச்சேவும் பெற்றுள்ளன.

இந்த ஆய்வு முடிவில் முதல் பத்து இடத்தில் ஆடி நிறுவனத்துக்கு 9 வது இடமே கிடைத்துள்ளது. ஜெர்மனி நிறுவனங்களும், ஜப்பான் நிறுவனங்களும் மதிப்புமிக்க கார் பிராண்டு பட்டியலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்துக்கு இந்த பட்டியலில் 8 வது இடமே கிடைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2011, 13:34 [IST]
English summary
Toyota has reclaimed its spot as the world's most valuable car brand, according to a study. The annual BrandZ study by global research agency Millward Brown, revealed that the Japanese car maker has vaulted BMW, with an 11 percent increase taking its brand value to first place.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+