காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய டொயோட்டோ பிரையஸ் ரெடி

உலகின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை டொயோட்டோ பிரையஸ் பெற்றுள்ளது. குறிப்பிட்ட நாட்டு சந்தைகளில் மட்டும் இந்த எலக்ட்ரிக் காரை டொயோட்டோ ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய பிரையஸ் எலக்ட்ரிக் காரை வரும் ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்க டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
ஹெட்லைட்டுகள் மற்றும் டேஞ்சர் லைட்டுகளின் வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர, முன்பக்க பம்பர் மற்றும் ரியர் வியூ மிரர்களில பகல் நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் முன்பைவிட தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் இருக்கும்.
இதேபோன்று உள்பக்கத்தில் கருப்பு கலருடன் கூடிய கிரே கலர் இன்டிரியர்கள், மேம்படுத்தப்பட்ட சீட் கவர்கள் மற்றும் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது பிரையஸ்.
அதேவேளை, எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. 98 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 36 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இந்த கார் 21 கிமீ மைலேஜ் கொடுப்பதாக டொயோட்டோ தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








