ஆந்திராவில் புதிய டிராக்டர் தொழிற்சாலை அமைக்கிறது மஹிந்திரா

டிராக்டர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ஏழு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இந்நிலையில், தென்னிந்தியாவில் முதல் டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது மஹிந்திரா.
தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள மேடக் மாவட்டத்தின் சகீராபாத்தில் மஹிந்திராவின் புதிய டிராக்டர் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகளுக்காக மஹிந்திரா நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
தெலுங்கானா பகுதியில் அமைக்கப்படும் இந்த புதிய டிராக்டர் தொழிற்சாலைக்கு ஆந்திர அரசு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. உற்பத்தி துவங்கும் நாளிலிருந்து, பத்து ஆண்டுகளுக்கு வாட் வரியிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைக்கு தேவையான எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவும், மத்திய அரசுக்கு ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு 90,000 டிராக்டர்களை தயாரிக்கும் திறன் படைத்ததாக அமைக்கப்படுகிறது.
ஆந்திர அரசின் பெருமுயற்சியால் தெலுங்கானா பகுதியில் அமைய உள்ள இந்த புதிய டிராக்டர் தொழிற்சாலை மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








