யூஸ்டு கார் மார்க்கெட் கிடுகிடு வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன?!

Used Cars
மும்பை: நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கார்களை வாங்குவது, மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகியவற்றால் இந்தியர்கள் அடிக்கடி காரை மாற்றுவதால் யூஸ்டு கார் சந்தை கிடுகிடு வளர்ச்சி கண்டு வருவதாக ஆட்டோமொபைல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் புதிய கார் மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டும் அபரிமித வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் செகன்ட் ஹேண்ட் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் வளர்ச்சிக்கு, இந்தியர்கள் அடிக்கடி காரை மாற்றி புதிய கார் வாங்குவதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் காரை மாற்றுவதற்கான சராசரி காலம், 12 ஆண்டுகளாக இருந்தது.

ஆனால், தற்போது அது 12 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. இதுவே, செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாஜிக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பங்கஜ் பட்டேல் கூறியதாவது:

"இந்தியர்களின் வருமானம் பன்மடங்கு உயர்ந்துள்ளதும், கார் கடன்கள் எளிதாக கிடைப்பதும், புதிய கார் விற்பனை சந்தை அபரிமித வளர்ச்சி பெற்று வருவதற்கு காரணம். தவிர, மேற்கத்திய கார் நிறுவனங்களின் வருகையால், இந்தியாவில் கார்களின் புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இதனால், பழைய காரை மாற்றி புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. அடிக்கடி காரை மாற்றும் கலாச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் காரை மாற்றும் சராசரி 12 ஆண்டுகளாக இருந்தது.

ஆனால், தற்போது அது 5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சராசரி 3 ஆண்டுகளாக குறையும். இதன் எதிரொலியால், செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டும் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.

மாருதி, மஹிந்திரா உள்ளி்ட்ட நிறுவனங்களும் யூஸ்டு கார் சந்தையில் நுழைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் செகன்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ், வால்வோ, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் யூஸ்டு கார் சந்தையில் நுழைய செகன்ட் கார் சந்தையில் மேலும் விறுவிறுப்பு கூடும் என்பது திண்ணம்.

புதிய கார்களுக்கு வழங்கப்படுவது போலவே, செகன்ட் கார்களுக்கும் பல முன்னணி நிறுவனங்கள் சர்வீஸ் சலுகைகள் மற்றும் வாரண்டி ஆகியவற்றை அளிக்கின்றன. நடுத்தர பிரிவு மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதும் முக்கிய காரணம்.

இதேபோன்று, எளிய கடன் வசதிகள், காரின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கும் திட்டங்களும், செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவதை எளிமையாக்கியுள்ளன. அதிக கடன் சுமையை விரும்பாதவர்கள் செகன்ட் ஹேண்ட் காரை வாங்குவதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

இதனால், புதிய கார் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில், செகன்ட் ஹேண்ட் கார் சந்தையும் சரிசமமான வளர்ச்சியை பெற்று வருகிறது," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2011, 13:10 [IST]
English summary
The automobile market is growing at a healthy rate, even the used car market is also witnessing huge churn out and now it has been reported that Indian consumers are now changing their automobiles every five years, on an average, down from 12 years a decade ago, leading to a rapid growth in the used-car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+