தொழிலாளர் நலச்சங்கத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கீகாரம்

Hyundai
சென்னை: ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகார பிரச்சினைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் தொடர் கோரி்க்கைகளை ஏற்று யுனைடெட் யூனியன் ஆப் ஹூண்டாய் எம்ளாயீஸ்(யு.யூ.எச்.இ.) தொழிற்சங்கத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே யு.யூ.எச்.இ. தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குமாறு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிர்வாகத்தை தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தொழிற்சங்கம் அமைக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தொழிலாளர்கள் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ், யு.யூ.எச்.இ.தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, யு.யூ.எச்.இ. தொழிற்சங்கம் கடந்த 12 ந் தேதி முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் டில்லிபாபு கூறுகையில்,"எங்களது சங்கம் அரசியல்சாராத அமைப்பாக செயல்படும். தற்போதுள்ள தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் பேசி சுமூக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்றார்.

இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், தொழிற்ச்சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்துள்ள முதல் நிறுவனம் ஹூண்டாய் மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2011, 10:39 [IST]
English summary
The Indian subsidiary of South Korean automobile maker Hyundai has finally accorded recognition to a workers union after years of refusal.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+