மல்லையா காரில் ஆயுதத்தால் கோடு கிழித்து சேதப்படுத்திய விஷமிகள்

Vijay Mallya
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பார்க்கிங் பகுதியில் படுபத்திரமாக நிறுத்தியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளர் மல்லையாவின் விலை மதிப்புமிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரில் விஷமிகள் கூர்மையான ஆயுதத்தால் கோடுகிழித்து சேதப்படுத்திய சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புமிக்க பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மல்லையாவின் கார் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2.2 கோடி மதிப்பு கொண்ட அந்த காரை விஜய் மல்லையா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கினார்.

அந்த காரின் நாலாபக்கமும் கோடு கிழித்து சேதப்படுத்தப்பட்டிருப்பதால், காருக்கு ரீப்பெயிண்டிங் செய்ய வேண்டும் என சர்வீஸ் சென்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்க நிறம் கொண்ட அந்த காருக்கு ரீப்பெயிண்ட் செய்யப்பட உள்ளது.

இதற்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ஒரு லட்சம் செலவு செய்வது மல்லையாவுக்கு பொருட்டான விஷயம் இல்லை என்றாலும், இந்த சம்பவத்தால் அவர் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், ரீப்பெயிண்டிங்கின்போது காரின் வண்ணத்தை மாற்றவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மல்லையாவின் காருக்கு அருகில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மல்லையா காரை குறிவைத்து விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2011, 15:19 [IST]
English summary
oyal Challengers Bangalore (RCB) team owner Vijay Mallya was in for a shock after he found his custom built Mercedes scratched from the bumper to fender on both sides. The Mercedes was scratched by miscreants at the Chinnaswamy stadium safest parking area.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+