வோக்ஸ்வேகன் கார் பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில் உடனடி கடனுதவி கிடைக்கவும், கார் விற்பனையை அதிகரிக்கவும் வோக்ஸ்வேகன் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் வோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவிலும் சேவையை துவங்க உள்ளது.
கார் கடன் சேவைகளை வழங்குவதற்கு அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கியிடம் வோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இதை பரிசீலித்த ரிசர்வ் வங்கி வோகஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்துக்கு வங்கி சாராத நிதி நிறுவனத்துக்கான லைசென்சை வழங்கியுள்ளது.
இதையடுத்து, விரைவில் ஸ்கோடா, ஆடி, வோக்ஸ்வேகன் கார்களுக்கு வோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கும் சேவைகளை வழங்க உள்ளது. மேலும், கடனுதவிகள் ஆடி பைனான்ஸ், ஸ்கோடா பைனான்ஸ், வோக்ஸ்வேகன் பைனான்ஸ் ஆகிய துணை நிறுவனங்கள் பெயரில் கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு வோகேஸ்வேகன் பைனான்ஸ் செயல்பட உள்ளது. இந்தியாவில் கடன் வழங்கும் சேவைகளுக்காக ரூ.110 கோடியை முதலீடு செய்கிறது வோக்ஸ்வேகன் பைனான்ஸ். நாடு முழுவதும் உள்ள ஆடி, ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்களின் 164 கார் டீலர்கள் மூலம் கார் கடன் வழங்கும் சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது வோக்ஸ்வேகன் பைனான்ஸ்.


Click it and Unblock the Notifications








